ஜப்பான் நாட்டின் பாரம்பரியமிக்க தொழில் குழுமமான சுமிட்டோமோ குழுமத்திற்கு கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா என்ற தொழிற்பூங்காவிற்கு அருகிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
மும்பை பாந்த்ரா குர்லா தொழிற்பூங்காவில், ஜியோ கார்டன் அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு 745 கோடி ரூபாய் வீதம், 3 ஏக்கர் நிலத்தை, 2,238 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க முன் வந்துள்ளது. இதனை மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது ஏற்கப்பட்டால், இதுவரை இந்தியாவில் இல்லாத அதிகபட்ச நில ஏல நடவடிக்கையாக இருக்கும். மேலும், மும்பை வடாலாவில் ஏக்கர் ஒன்று 653 கோடி ரூபாய் என்ற விலையில், 6.2 ஏக்கர் நிலத்தை 4 ஆயிரத்து 50 கோடிக்கு வாங்கியது தான் அதிகபட்ச தொகையில் எடுக்கப்பட்ட நில ஏலம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…