கத்தாரில் ஒருவரின் குழந்தையை கடித்ததாக 29 நாய்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் ஒரு பாதுகாப்புப் பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நுழைந்து 29 நாய்களை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தை விலங்கு மீட்புக் குழு PAWS Rescue Qatar தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்குள்ள நாய்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். அதில் 29 நாய்கள் உயிரிழந்துள்ளது என்று தோஹா நியூஸ் ரிபோர்ட் தெரிவித்துள்ளது.நாய்களில் ஒன்று தங்கள் மகன்களை கடித்ததால் துப்பாக்கிசூடு நடத்தியவர்கள் கூறினர்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பல நாய்கள் காயமடைந்துள்ளது எனவும், கமடைந்த நாய்கள் கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கடும் கோபத்தை தூண்டியுள்ளது.விலங்கு பிரியர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…