ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு!
வடக்கு ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார் சர்-இ-புல் மாகாணத்தில், மலைப்பாங்கான சாலைகள் நிறைந்த பகுதியில், பயணிகள் திருமணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது என கூறப்படுகிறது.
மேலும் காவல்துறை கூறுகையில், பயணிகள் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்தனர். மினிபஸ் கவிழ்ந்த விபத்துக்கு ஓட்டுநர் காரணம், அவரது கவனக்குறைவால் மினி பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்தது. ஆப்கானிஸ்தானில் அதிக போக்குவரத்து விபத்துகள் நடக்கிறது, அவை முதன்மையாக மோசமான சாலை நிலைமைகள் மற்றும் கவனக்குறைவான ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.