கஜகஸ்தான் சுரங்கத்தில் தீ விபத்து! 21 பேர் பலி…18 பேர் காயம்!

Kazakhstan mine fire

கஜகஸ்தானின் கரகாண்டா பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தானது இன்று காலை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அந்த சுரங்கத்தில் வேலை செய்து வந்த 252 பேரில், 208 பேர் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், தீ விபத்தில் சிக்கி 21 பேர் கருகி உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 23 சுரங்கத் தொழிலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவர்களை  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த கசாக் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், நாட்டின் மிகப்பெரிய எஃகு ஆலையை இயக்கும் அந்த சுரங்கத்தின் உடனான முதலீட்டு ஒப்பந்தத்தை நிறுத்துமாறு அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்