2023-இல் நடந்தது என்ன? மறக்க முடியாத ‘டாப் 10’ நிகழ்வுகள்!!
இந்த ஆண்டு (2023)-இல் நம்மால் மறக்க முடியாத வகையில் பல நிகழ்வுகள் நடந்து இருக்கிறது. அது என்னவென்ற சிறு குறிப்பை பார்க்கலாம்.
1. துருக்கி நிலநடுக்கம்
- துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 மாகாணங்களில் 11 மாகாணங்களில் 50,783 பேர் இறந்தனர். 297 பேர் காணவில்லை மற்றும் 107,204 பேர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 15.73 மில்லியன் மக்களும் 4 மில்லியன் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 345,000 குடியிருப்புகள் நிலநடுக்கத்தால் அழிந்தது.
2. இந்தியாவை மிஞ்சிய சீனா
- உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவை மிஞ்சி மாறியது. மக்கள் தொகை 142.86 கோடியைத் தொட்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவை விட 142.57 கோடிக்கு சற்று முன்னால் உள்ளது.
3. மணிப்பூர் கலவரம்
- மே மாதம் 3-ஆம் தேதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையான மேதேயி மக்களுக்கும் மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளைச் சேர்ந்த குக்கி-சோ பழங்குடி சமூகத்திற்கும் இடையே இனக்கலவரம் நடந்தது. இந்த கலவரத்தால் 175 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.
4. ஒடிசா ரயில் விபத்து
- 2 ஜூன் 2023 அன்று, கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முழு வேகத்தில் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே பிரதான பாதைக்கு பதிலாக கடந்து செல்லும் தண்டவாளத்தில் நுழைந்து சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 296 பேர் உயிரிழந்தார்கள்.
5. சந்திரயான் 3 வெற்றி
- கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் ‘சந்திரயான்-3 ‘விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்தது.
6. இஸ்ரேல்-ஹமாஸ் போர்
- கடந்த அக்டோபர் மாதம் முதல் காசாவில் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏறக்குறைய 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
7. உலகக்கோப்பை இந்தியா தோல்வி
- கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்ரேலியா அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உலகக்கோப்யை வெல்ல தவறியது.
8. தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த மோடி
- மணிக்கு 1,975 கி. மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட தேஜஸ் விமானத்தில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி பிரதமர் மோடி பயணம் செய்து தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த முதல் பிரதமர் என்ற சாதனையை படைத்தார்.
9. சென்னை வெள்ளம்
- மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கனமழை பெய்து அங்கு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் மக்கள் பலரும் அவதி அடைந்தனர். இந்த வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
10.தூத்துக்குடி வெள்ளம்
- டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் மக்கள் பலரும் தத்தளித்தனர். இந்த வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் சிலரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.