மெக்சிகோ அதிபர் தேர்தல்.. 200 ஆண்டுகள் கழித்து பெண் வேட்பாளர் வெற்றி.!

Default Image

மெக்சிகோ : கிளாடியா ஷெயின்பாம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் தனது வழிகாட்டியும் தற்பொழுது அதிபராக இருக்கும் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடோரின் திட்டங்களை  தொடரவுள்ளார்.

கிளாடியா ஷெயின்பாம், ஒரு காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆவார். இவர், 58.3% முதல் 60.7% வரை வாக்குகளைப் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது மெக்சிகோவின் ஜனநாயக வரலாற்றில் உயர்ந்த வாக்கு சதவிகிதமாகும்.

அதிபர் அணியினரின் கூட்டணி இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருப்பதால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியும். எதிர்க்கட்சித் தலைவர் சோக்சிடில் கல்வெஸ் 26.6% முதல் 28.6% வரை வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

இந்த வெற்றிக்கு பின் தனது ஆதரவாளர்களிடம் பேசிய கிளாடியா “200 ஆண்டுகள் கடந்த பிறகு முதல் பெண் அதிபராக நான் ஆகப்போகிறேன்,” என்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

கிளாடியா வின் வெற்றி மெக்சிகோவுக்கு கிடைக்கும் பெரும் முன்னேற்றம் மற்றும்  பாரம்பரிய மதிப்புகள் மற்றும் பெண்களுக்கான மரபு நிலைகளைக் காப்பாற்றிய நாட்டில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றி அமெரிக்கா, மெக்சிகோ அல்லது கனடாவில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண் கிளோடியா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்