Categories: உலகம்

Pakistan Horror:பாகிஸ்தானின் முல்தான் மருத்துவமனையின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட 200 அழுகிய உடல்கள்

Published by
Dinasuvadu Web

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் மொட்டை மாடியில்  குறைந்தது 200 அழுகிய சடலங்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் மேல்தளத்தில் கட்டப்பட்ட அறையில் டஜன் கணக்கான உடல்கள் அழுகி நிலையிலும், மறுபுறம், சமூக ஊடகங்களில் பரவும் செய்தியின்படி,மேற்கூரையிலிருந்து இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் சவுத்ரி ஜமான் குஜ்ஜரின் ஆலோசகர்,மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​மருத்துவமனை சவக்கிடங்கின் மேற்கூரையில் பல அழுகிய உடல்கள் இருப்பதை வெளிக்கொண்டுவந்தார்.

வெளிவந்த 200 உடல்கள்:

இதுகுறித்து அவர் கூறுகையில்,”நான் நிஷ்தார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு மனிதர் என்னை அணுகி, நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்ய விரும்பினால், பிணவறைக்குச் சென்று பாருங்கள்,” என்று கூறினார்.

அவர் அங்கு சென்றபோது பிணவறையின் கதவுகளைத் திறக்க ஊழியர்கள் தயாராக இல்லை என்றார். “இதற்கு, நீங்கள் இப்போது திறக்கவில்லை என்றால், நான் உங்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப் போகிறேன்” என்று கூறிய பின்னர் தான் கதவை திறந்தனர் அதன் பின்பு தான் அங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன்பின்னர் கைவிடப்பட்ட உடல்களை தகனம் செய்ய உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு மூன்று நாட்களில் ஒரு குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ மாணவர் பேட்டி:

இதற்கிடையில், நிஷ்தர் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டான் செய்தித்தாளிற்கு அளித்த பேட்டியில் , மாணவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

உடல்கள் ஏற்கனவே பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டதாகவும், மேலும் மருத்துவ பயன்பாட்டிற்காக எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை பிரித்தெடுக்க கூரையில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recent Posts

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

11 minutes ago

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

39 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

1 hour ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

1 hour ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…

2 hours ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

2 hours ago