கயானாவில் உள்ள பள்ளிக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி மற்றும் பலர் காயமடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான கயானாவில், பள்ளி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹ்டியா நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பலத்த காயமடைந்த 6 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை.
சுமார், 800,000 மக்கள் வசிக்கும் சிறிய ஆங்கிலம் பேசும் நாடான கயானா, உலகின் மிகப்பெரிய தனிநபர் எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட முன்னாள் டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனியாகும்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…