சீன தலைநகரில் வெள்ளப் பாதிப்பால் 20 பேர் பலி, 27 பேர் மாயம்!
சீனா தலைநகரான பெய்ஜிங்கில் தொடர்ந்து நான்காவது நாளாக பெய்த கனமழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழப்பு, மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த மழையால் அங்கு பல சாலைகள் சேதமடைந்து மரங்கள் வேரோடு சாய்ந்தன. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் பெய்ஜிங்கின் அருகிலுள்ள நகரங்களான ‘Tianjin’ மற்றும் ‘Zhuozhou’ நகரங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300 பேர் உயிரிழந்தனர் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.