டிக்டாக் -ன் பிளாக் அவுட் சவாலால் கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியை பற்றி அறியாமல் இருக்க முடியாது. இந்த டிக்டாக்-ன் மூலம் அனைவரும் தங்களுடைய திறமைகளை வீடியோ மூலம் வெளியிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து டிக்டாக் -ன் ப்ளாக் அவுட் சவால் “blackout challenge” என்பது மக்களிடையே தற்போது பரவி வருகிறது.
பிளாக் அவுட் சவாலானது மக்கள் தங்களால் எவ்வளவு நேரம் அவர்களது மூச்சை பிடித்து வைத்துக்கொண்டு இருக்கமுடியும் என்பதாகும். தங்களால் மூச்சி விடமுடியாத நிலையில், தோல்வியை ஒப்புக்கொள்ளும் ஒரு மரண விளையாட்டு ஆகும்.
இந்த சவாலை மேற்கொள்ளும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிலர் இறந்து விடுகின்றனர். அமெரிக்க செய்தி ஊடகமான ப்ளூம்பெர்க்(Bloomberg) நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த விளையாட்டால் கடந்த 18 மாதங்களில் 20 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றும் அவர்களில் 5-ற்கும் மேற்பட்ட குழந்தைகள் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2008இல் இதே சவாலை மேற்கொண்டு 80பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிக்டாக் தரப்பில் இது குறித்து கூறும்போது, இது போன்ற சவால்களை டிக்டாக் ஒருபோதும் உருவாக்குவதில்லை, பயனர்கள் தான் உருவாக்குகின்றனர் என்று கூறியது.
இந்த சவாலை மேற்கொண்டவர்கள் சிவந்த கண்கள், மற்றும் கடும் தலைவலியுடன் காணப்படுவார்கள். 2021-ல் இந்த சவாலை யாரும் மேற்கொள்ளவேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த சீனாவின் செயலியான டிக்டாக் ஆனது, இந்திய மக்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, கடந்த ஜூன் 2020இல் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…