இத்தாலியில் 2 கப்பல்கள் மூழ்கி விபத்து! 11 பேர் பலி.. 64 பேர் மாயம்!
ரோம் : இத்தாலிக்கும் கிரீஸுக்கும் இடையில் மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தவர்கள் பயணம் மேற்கொண்ட 2 கப்பல்கள் தெற்கு இத்தாலியில் வெவ்வேறு சம்பவங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு சம்பவத்தில் 64 பேரைக் காணவில்லை, கடலில் இருந்து காப்பாற்றப்பட்ட 11 பேர் தெற்கு இத்தாலியின் ரோசெல்லா அயோனிகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் தெற்கு இத்தாலியின் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் ஒன்றான லம்பேடுசா தீவி விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
கலாப்ரியாவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் உடைந்து விபத்துக்குள்ளான படகு துருக்கியில் இருந்து எட்டு நாட்களுக்கு முன்பு புறப்பட்டது என்றும், படகில் தீப்பிடித்து கவிழ்ந்தது என்றும் தெரிய வந்துள்ளது.
இத்தாலிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இரண்டு வணிகக் கப்பல்களை மீட்புப் பகுதிக்கு திருப்பி விட்டது. மேலும், கடலில் தப்பியவர்களும் இன்னும் காணாமல் போனவர்களும் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று ஐ.நா. மேற்கோள் காட்டியுள்ளது.