உயிரிழக்கும் அபாயம்!! காசாவில் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பு – ஐநா கவலை!
இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே 8வது நாட்களாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஹமாஸ்–இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இருளில் மூழ்கிய காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது,
ஏற்கனவே, காசா நகரில் மின்உற்பத்தி மற்றும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது, காசா பகுதியில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தண்ணீரின்றி உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐநா வெளியிட்ட செய்தி குறிப்பில், காசாவில் அக்டோபர் 11 முதல் மின்சாரம் தடைப்பட்டு, நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 13 பணய கைதிகள் பலி – ஹமாஸ் அறிவிப்பு!!
இந்நிலையில், கிணறுகளில் இருந்து வரும் அசுத்த நீரை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு இப்போது காசாவிற்கு எரிபொருளை ஏற்றிச் செல்ல வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க எரிபொருள் மட்டுமே ஒரே வழி. இல்லையெனில், மக்கள் கடுமையான நீரிழப்பு காரணமாக உயிரிழக்க தொடங்குவார்கள்.
ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது… இஸ்ரேல் கடும் கண்டனம்!
நேற்றைய தினம், இன்னும் 24 மணிநேரத்தில் அங்குள்ள மக்களை வெளியேற்றாவிட்டால் உயிரிழப்புகள் ஏற்பட கூடும். பொதுமக்களை வேண்டுமென்றே உணவில்லாத நிலை ஏற்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும் என குறிப்பிட்டு இருந்தது. கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக