அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி டிரேடிங் வழக்கில் 2 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட முதல் இன்சைடர் டிரேடிங் வழக்கில் இரண்டு இந்திய சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் காயின்பேஸ் இன் முன்னாள் தயாரிப்பு மேலாளர் இஷான் வாஹி மற்றும் நிகில் வாஹி – கடந்த வியாழன் காலை சியாட்டிலில் கைது செய்யப்பட்டனர்.
அறிக்கையின்படி, காயின்பேஸ் நிறுவனம் தன் பரிமாற்றத்தின் மூலம் மக்களை கிரிப்டோ வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. இஷான் வாஹி தனது சகோதரர் மற்றும் நண்பர் ரமணிக்கு புதிய கிரிப்டோகரன்சி பற்றி வரவிருக்கும் அறிவிப்புகள் பற்றிய ரகசியத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதனால் பொது மக்களுக்கு முன்னால் அந்த கிரிப்டோ சொத்துக்களில் லாபகரமான வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளனர்.
வஹி மற்றும் ரமணி ஆகியோர் சொத்துக்களைப் வாங்குவதற்கு எதெரியம் பிளாக்செயின் வாலட்களைப் பயன்படுத்தியதாகவும், ஜூன் 2021 மற்றும் ஏப்ரல் 2022 முதல் காயின்பேஸ்-இன் அறிவிப்புகளுக்கு முன் குறைந்தது 14 முறை வர்த்தகம் செய்ததாகவும், குறைந்தது $1.5 மில்லியன் சட்டவிரோத ஆதாயங்களைப் பெற்றதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.