ஆஸ்திரேலியாவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து! 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் 2 ஹெலிகாப்டர்கள், நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் கடற்கரை அருகில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காவல்துறை தெரிவித்த தகவலின்படி ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சிக்கும் போதும் மற்றொரு ஹெலிகாப்டர் புறப்படும் போதும் ஒன்றுக்கொன்று மோதியுள்ளன. சீவொர்ல்ட் டிரைவ்(Sea World Drive) அருகே உள்ள மெயின் கடற்கரையில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட தயாராக இருந்தது. அப்போது இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.