நேபாளம் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்ட 2 பேருந்துகள்.! 7 இந்தியர்கள் உட்பட 63 பேரின் நிலை என்ன.?

Central Nepal Landslide

நேபாளம்: மத்திய நேபாளம் பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 2 பேருந்துகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன.

நேபாள நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுள்ளது. மத்திய நேபாளத்தில் திரிசூலி நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவின் போது அவ்வழியாக வந்த இரண்டு பயணிகள் பேருந்துகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. அடித்து செல்லப்பட்டதில் ஒன்று நேபாள தலைநகர் காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த ஏஞ்ஜெல் பேருந்து என்பதும், அதில் 24 பயணிகள் இருந்ததாகவும், மற்றொரு பேருந்தானது காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகவும் இதில் 41 பயணிகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் 3 பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து தப்பித்தததாகவும், மீதம் உள்ள 60 பயணிகள், பேருந்து ஓட்டுனர்கள் என 63 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மீட்புபணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழைபெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுளளதாகவும் கூறப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள 63 நபர்களில் 7 பேர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் பெயர்கள் சந்தோஷ் தாகூர், சுரேந்திர சாஹ், அதித் மியான், சுனில், ஷானவாஸ் ஆலம், அன்சாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு இந்தியரின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்