அமெரிக்கா: 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து…3வீரர்கள் பலி.!
அமெரிக்காவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சி விமானத்தின் போது விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் 2 இரண்டு அமெரிக்க இராணுவ தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது, AH-64 Apache ஹெலிகாப்டரில் 4 பேர் பயிற்சி முடிந்து திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, ஆனால் இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தாண்டில் அலாஸ்காவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாவது இது 2வது முறையாகும், தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக பிப்ரவரியில், அலாஸ்காவின் டால்கீட்னாவில் ஒரு இராணுவ ஹெலிகாப்டர் – ஒரு இராணுவ AH-64D – ரோல்ஓவர் விபத்தில் சிக்கியதில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் குறிப்பித்தக்கது.