தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவில் இருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்.! 

Isreal Palastinian War

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரையில் 2000 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 1200 பேர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 900 க்கும் அதிகமானோர் பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம்.. சமநீதி கிடைக்க வேண்டும்.! அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை.! 

தற்போது, இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருப்பதாக கருதப்படும் காஸா நகரில் தற்போது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 18 மணி நேரமாக காஸா நகர் மீது தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

ஐந்து நகரங்களைக் கொண்ட காஸாவின் முக்கிய பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கு ஹமாஸ் அமைப்பினர் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பெயரில் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள்ளது.

காஸாவில் 5 நகரங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 20 லட்சம் பேர் இருக்கின்றனர். தற்போது தாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், தாக்குதல் நடைபெறும் இடங்களில் உள்ள பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.  அவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஸா எல்லை பகுதியில், எகிப்து எல்லையிலோ அல்லது இஸ்ரேல் முகாம்களிலோ அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை ஐநாவின் மனித உரிமை ஆணையம் மற்றும் உலக சுகாதார அமைப்புகள் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்