அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 195 பேர் பலி – ஹமாஸ் தகவல்!

Hamas WAR

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்னர்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது. இந்தப் போர் 27 நாட்களுக்குப் பிறகும் தொடர்கிறது. இப்போது வரை 1400 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில், 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் 777 பேர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் ஹமாஸின் இராணுவத்தையும் ஆளும் திறனையும் அழிக்கும் குறிக்கோளுடன் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். தற்போது காசா பகுதிக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தரைவழி ஊடுருவலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஹமாஸுக்கு எதிராக இந்திய மக்கள் நிற்க வேண்டும்- ஹமாஸ் தலைவரின் மகன்

ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்