19,000 பேருக்கு வேலை போகும் அபாயம்; அக்சென்சர் அதிரடி முடிவு.!
அக்சென்சர் நிறுவனம் வருடாந்திர வருவாய், மற்றும் லாபம் இவற்றை கருத்தில் கொண்டு 19,000 ஊழியர்களை பணிநீக்க முடிவு.
பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பாக தகவல் மற்றும் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், ஆன்லைன் வணிக தளங்கள் உள்ளிட்டவைகள் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கணிசமான அளவில் பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதற்கு அக்சென்சர் நிறுவனமும் விதிவிலக்கல்ல என்பது போல் தற்போது அந்நிறுவனமுன் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்சென்சர் நிறுவனம், அதன் வருடாந்திர வருவாய் மற்றும் இலாபங்களை கருத்தில் கொண்டு அதன் 2.5% பணியாளர்களை அதாவது 19,000 பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் IT துறையில் கார்ப்பரேட் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட எண்டர்பிரைஸ் டெக்னாலஜி ரிசர்ச் நடத்திய ஆய்வில், நிறுவனங்கள் 2023 பட்ஜெட் வளர்ச்சியைக் குறைக்க திட்டமிட்டுள்ளனர், இதனால் நிறுவனத்தின் நிகரவருவாய் வளர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.