வாஷிங்டன்: விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்து… 19 பேர் உயிரிழப்பு.!

அமெரிக்காவில் விமானம் மீது ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

America Plane Crash

வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில் வெடித்து சிதறியது. ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதி ஆற்றில் விழுந்தது.

பயணிகள் விமானம் மீது மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் 60 பேர் இருந்தனர். கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டாவில் இருந்து நாட்டின் தலைநகர் வாஷிங்டன் நோக்கி சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில், பொட்டாமக் ஆற்றில் விழுந்த விமானத்தில் பயணித்த 60 பேரின் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. விமானத்தில் பயணித்தவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தகவலின் படி, இதுவரை 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே, விமானம் வெடித்துச் சிதறிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Nitish Kumar vaibhav suryavanshi
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi
4 year old child died