தரையிறக்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! 18 பேர் காயம்…
மினசோட்டாவிலிருந்து டொராண்டோவுக்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 17 மதியம் 2:45 மணிக்கு விபத்துக்குள்ளானது.

கனடா : கனடாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். டெராண்டோ பியர்சன் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய டெல்டா 4819 விமானம், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கிறது.
விபத்தை தொடர்ந்து பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். மேலும், அதில் பயணம் செய்த 76 பயணிகள் 4 ஊழியர்கள் என, மொத்தம் 80 பேர் அந்த விமானத்தில் பயணித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 18 பேர் காயமும் மூன்று பேர் படுகாயமும் அடைந்தனர்.
இப்போது, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனி மூடிய ஓடுபாதையில் விமானம் உரசி தீப்பிடித்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. மினசோட்டாவிலிருந்து டொராண்டோவுக்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 17 மதியம் 2:45 மணிக்கு விபத்துக்குள்ளானது.
🚨UPDATE: Delta Airlines jet crashed at Toronto Pearson International Airport, with 75 passengers on board leaving 18 injured.
Delta flight carrying around 80 passengers crash lands at Toronto Pearson Airport.#planecrash pic.twitter.com/WGUl2vEZzt
— Manni (@ThadhaniManish_) February 18, 2025
விமானத்தில் இருந்த 80 பேரும் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.