பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இராணுவ தலைமையகம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம் காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மொராகலூ கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அந்த சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு விமானிகள் , 3 ராணுவ வீரர்கள் என 17 பேர் இறந்தனர். மேலும் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து ராவல்பிண்டி மாவட்ட ஆணையர் அலி ரண்தாவா கூறுகையில் , பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்த சிறிய ரக விமானம் அதிகாலை 2.30 மணி முதல் 2.40 மணிக்குள் விபத்துக்கு உள்ளானது.
விமானிகள் உட்பட ஐந்து இராணுவ வீரர்கள் இறந்தனர். மேலும் பொதுமக்கள் 12 பேர் இறந்து உள்ளனர் என கூறினார். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…