பஹாமாஸில் படகு மூழ்கியதில் 17 பேர் பலி
ஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு பஹாமாஸ் அருகே மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
நேற்று(ஜூலை 24) நியூ பிராவிடன்ஸிலிருந்து 11 கிமீ தொலைவில் பஹாமாஸ் கடற்கரையில் ஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மீட்புப் படையினர் 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 25 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பஹாமாஸ் பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ் கூறுகையில், மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்புப் படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் உயிரிழந்தவர்களில் 15 பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு கைக்குழந்தை அடங்குவர் என்றும் பஹாமாஸ் பிரதமர் கூறுகிறார்.