16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள ரஷ்யா புறப்பட்ட பிரதமர் மோடியை அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

Narendra Modi in Russia

கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர்.

இதில் கலந்துக் கொள்ள 2 நாட்கள் அரசு முறை பயணமாக, இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. காலை புறப்பட்ட மோடி, தற்போது ரஷ்யாவின் கசானுக்கு சென்றடைந்துள்ளார். இதை பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

கசானுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், அங்குள்ள இந்திய வம்சாவளிகளும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, அவர் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அரசு முறை பயணமாக மட்டும் மோடி ரஷ்யா செல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம் தான் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி  ரஷ்ய செண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்