Alfie Lewis [File Image]
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது சிறுவனான ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது ஹார்ஸ்ஃபோர்த் அருகில் உள்ள தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறும் போது சக மாணவர்கள் கண் முன்னே ஆல்ஃபி லூயிஸ் இப்படி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 7 ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணி அளவில் ஹார்ஸ்போர்த்தில் உள்ள செயின்ட் மார்கரெட் ஆரம்பப் பள்ளிக்கு அருகில், பள்ளியை விட்டு வெளியேறும் பொழுது சக மாணவர்களின் கண் முன்னே ஆல்ஃபி லூயிஸ்ஸை அந்த சிறுவன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த சமையலறை கத்தியை கொண்டு ஆல்ஃபி லூயிஸ்ஸின் இதயத்தில் இரண்டு முறை குத்தி உள்ளார். மேலும், கால்களில் இரண்டு முறையும் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ஆல்ஃபி லூயிஸ் பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேலும், அவரது ஆல்ஃபியின் இதயத்தில் 14 சென்டிமீட்டர் ஆழமான காயம் ஏற்பட்டதால் தான் அவர் மரணமடைந்துள்ளார் என்று அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்த அந்த சிறுவனின் தரப்பில், ஆல்ஃபி லூயிஸ் என்னை தாக்கி விடுவான் என்ற அச்சத்தில் தான் இதை செய்துள்ளான் என வாதாடி உள்ளனர்.ஆனால், அதே நேரம் காவல்காவல்துறை சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் வேறு மாதிரியாக இருந்ததால் இந்த வழக்கின் அப்போது ஒத்தி வைத்தனர்.
தற்போது இந்த வழக்கில் அன்றைய தினம் ஆல்ஃபி எதுவும் செய்யவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தான் கத்தியால் குத்தினான் எனவும் அனைத்து சாட்சிகளும் நிலையாக இருந்தன. இதன் காரணமாக அந்த 15 வயது சிறுவனக்கு இந்த வழக்கில் இவர் தான் கொலையாளி என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், ஆல்ஃபி லூயிஸ்ஸை கொன்ற அந்த கொலையாளி சிறுவனின் பெயர் விவரங்களும், மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த சிறுவனுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் எதுவும் இது வரை வெளியிடப்படவில்லை.
இந்த தீர்ப்பால் ஆல்ஃபி லூயிஸ்ஸின் குடும்பத்தினர்கள், நடுவர் மன்றத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், 15 வயதில் மரணமடைந்த ஆல்ஃபி லூயிஸ்ஸை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…