சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 15 பேர் பலி… பலர் காயம்

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் அந்நாட்டில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீவிபத்து இதுவாகும். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தினம் சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதே நேரம், பலரும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More – அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை… இந்த நாடுகளில் கஞ்சா குற்றமில்லை… லிஸ்ட் இதோ…

சம்பவத்தை தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனிடையில் நகர மேயர் சென் ஜிசாங், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்