பரபரப்பு: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 14 பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள்.!

Mexico

மெக்சிகோவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 14 ஊழியர்களை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், பொது ஊழியர்கள் உட்பட 14 பேர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், கடத்தப்பட்டதிற்கான காரணமும், அவர்களை தேடும் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது, இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், Ocozocoautla மற்றும் Tuxtla Gutierrez நகரை இணைக்கும் நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் திடீரென நிறுத்தப்பட்ட மர்ம நபர்கள் வாகனங்களில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது தெளிவாக காட்டுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் ஒரு சர்ச்சைக்குரிய இராணுவ போதைப்பொருள் எதிர்ப்பு தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மெக்ஸிகோவில் 350,000 க்கும் மேற்பட்ட கொலைகள் மற்றும் 110,000 காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்