13,990 சதுர அடி உலகின் மிகப்பெரிய பீட்சா! கின்னஸ் சாதனை.!
13,990 சதுர அடியில் உலகின் மிகப்பெரிய பீட்சாவாக, கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பீட்சா, என 13,990 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்ட பீட்சா கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், பிரபல பீட்சா ரெஸ்டாரண்ட் ஆன பீட்சாஹட்(Pizza Hut) மற்றும் யூடியூபர் ஏர்ராக் உடன் இணைந்து இந்த பீட்சாவை தயாரித்தது.
13,990 சதுர அடி பரப்பளவில் 68,000-க்கும் மேற்பட்ட துண்டுகள் கொண்ட இந்த பீட்சா, 6,193 கிலோ மாவும், 3,990 கிலோவுக்கும் அதிகமான சீஸ் கொண்டும் தயாரிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.