Categories: உலகம்

உயரும் பலி எண்ணிக்கை! ஹஜ் யாத்திரையில் 1,300 யாத்ரீகர்கள் கடும் வெயிலால் உயிரிழப்பு.!

Published by
கெளதம்

ஆசிய நாடுகளில் கடும் வெப்பம் வாட்டி வைத்து வரும் நிலையில், சவுதிஅரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. மெக்காவில் வெப்பநிலை 125 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், மெக்காவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலையால் தற்போது வரை உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

அதில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவிலிருந்து 98 பேரும், இரண்டு அமெரிக்க யாத்ரீகர்கள் உட்பட ஜோர்டான், துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சிலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து சவூதி சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஜலாஜெல் கூறுகையில், 1,300 இறப்புகளில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்றும், தற்பொழுது 95 யாத்ரீகர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

அவர்களில் சிலர் தலைநகர் ரியாத்தில் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். இறந்த யாத்ரீகர்கள் பலரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால், அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் 660க்கும் மேற்பட்டோர் எகிப்தியர்கள் என்றும், அவர்களில் 31 பேரைத் தவிர மற்ற அனைவரும் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்று கெய்ரோவில் உள்ள இரண்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால், அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்களை புனித யாத்திரை செல்ல உதவிய 16 பயண நிறுவனங்களின் உரிமங்களை எகிப்து ரத்து செய்துள்ளனர்.

Recent Posts

கனமழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்!!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன்…

8 hours ago

“துறையும் வளந்துருக்கு ..துறை அமைச்சரும் வளந்துருக்காரு”! – நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : ஆண்டுதோறும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள்…

9 hours ago

தவெக முதல் மாநாடு : பணிகளை தீவிரமாய் கண்காணிக்கும் தலைவர் விஜய்?

சென்னை : தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அனைவரது கண்ணும் விழுப்புரம் விக்ரவாண்டியை நோக்கியே இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய…

10 hours ago

திடீர் உடல்நலக் குறைவு! அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

திருச்சி : தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், வயது முடித்தீர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்…

10 hours ago

“தமிழ்நாட்டின் ஒலிம்பிக்., முதலமைச்சர் கோப்பை.!” உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் என பலரும்…

11 hours ago

பெங்களூர் கட்டிட விபத்து : உயிரிழந்த இருவருக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பெங்களுருவில் உள்ள பாபுசாப் பாளையாவில்…

12 hours ago