பிரேசில் அமேசான் பகுதியில் விமான விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

Brazil Plane Crash

பிரேசிலின் அமேசான் பகுதியில் நேற்று காலை சிறிய ரக விமானத்தில் பயணித்த 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

கவர்னர் கிளாட்சன் கேமிலியின் பத்திரிகை அலுவலகத்தின்படி, பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில்  பரவி வரும் வீடியோ ஒன்றில், விபத்து நடந்ததாகக் கூறப்படும் அந்த சிறிய விமானம் காட்டில் எரிந்தபடி காட்சிகள் காட்டுகிறது.

இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில், ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதே போல், செப்டம்பர் மாதம் பார்சிலோஸ் நகரில் புயலின் போது தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூன் மாதம், அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகள் 40 நாட்கள் கழித்து தீவிர தேடுதலில் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்