துருக்கியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி!
மத்திய துருக்கியில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மத்திய துருக்கிய நகரமான யோஸ்காட் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி சாலை அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததாக ஆளுநர் மெஹ்மத் அலி ஓஸ்கான் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, அதற்கான விசாரணை தொடங்கியுள்ளதாகவும், ஓட்டுநரின் கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஓஸ்கான் தகவல் தெரிவித்திருக்கிறார்.