ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் உயிரிழப்பு! விஷவாயு தாக்கி உயிரிழப்பா? போலீசார் தீவிர விசாரணை!

ஜார்ஜியாவில் விஷவாயு தாக்கியதில், உணவகத்தில் பணியாற்றிய 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

georgia 11 Indians found dead

ஜார்ஜியா : நாட்டில் உள்ள மலை விடுதியான குடாரியில் உள்ள உணவகத்தில் 11 இந்தியர்கள் விஷவாய்ப்பு தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறந்தது இந்திய தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.  இதனையடுத்து, இவர்கள் உண்மையில் விஷய வாய்ப்பு தாக்கி உயிரிழந்தார்களா? அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்பது பற்றி ஜார்ஜியாவின் உள் விவகார அமைச்சகம் பரிசோதனை நடத்த தொடங்கியது. அப்போது உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் அல்லது வன்முறை எதுவும் நடந்த அறிகுறிகள் எதுவும் இல்லை.

இதனை தொடர்ந்து உள்ளூர் ஊடகங்கள், போலீஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, கார்பன் மோனாக்சைடு விஷம் காரணம் தான் இந்த  இறப்புகளையும் ஏற்படுத்தியது என செய்திகளை வெளியிட்டு வருகிறது.  இதனையடுத்து. இந்த சம்பவம் குறித்து ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 116 இன் கீழ் உள்ளூர் அதிகாரிகள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதற்கட்டமாக , தூங்கும் அறைக்கு அருகில் உள்ள மூடிய இடத்தில் மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்)  பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை மாலை மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து இது செயல்படுத்தப்பட்டிருக்கலாம். உயிரிழப்பு சம்பவம் எப்படி  நடந்தது என்பது பற்றிய  சரியான காரணத்தை கண்டறிய தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தும், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களிடம் அதிகாரிகள் நேர்காணல் நடத்தி வருவதுடன், விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், வெளியுறவுத்துறை கொடுத்த தகவலின் படி, மின்சாரம் தடைபட்டதால் ஜெனரேட்டரை பயன்படுத்தியபோது, அதில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசித்ததால்  மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 11 பேர் இந்தியர்கள் உணவு தகவலை தெரிவித்துள்ளனர். விரைவில் போலீசார் விசாரணையை முடித்துவிட்டு தகவலை தெரிவிப்பார்கள் என கூறபடுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து இந்தியத் தூதரகம் வெளிட்டு இருக்கும் அறிக்கையில் ” ஜார்ஜியாவின் குடாரியில் துரதிர்ஷ்டவசமாக பதினொரு இந்திய பிரஜைகளின் காலமானதை அறிந்து வருத்தமடைகிறது, மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு,  உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படும்.  உயிரிழந்த குடும்பங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் மற்றும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க உறுதியளித்துள்ளோம்” என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்