1000 கோடி முதலீடு, 1.75 லட்சம் கோடி வருமானம்.! மஸ்க்கின் மாஸ்டர் பிளான்.!
டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதன் மூலம், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த எலான் மஸ்க் பல கோடிகள் ஒரே நாளில் சம்பாதித்துள்ளார்.
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதிலும், முக்கியமான காரணம் என்றால், டொனால்ட் டிரம்ப்க்கு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வந்த எலான் மஸ்க் என்று கூறலாம். ஏனென்றால், தேர்தலுக்காக எலான் மஸ்க் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக 132 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பின் படி ரூ.1000 கோடி) தேர்தல் பரப்புரை அளித்து உதவி செய்திருந்தார்.
அதைப்போல, தொடர்ச்சியாகப் பிரச்சாரம் மட்டும் செய்துகொண்டில்லாமல் டொனால்ட் டிரம்ப்க்கு வாக்கு அளிக்கும் வாக்காளர்களுக்கு 47 டாலர் வழங்கப்படும் எனவும் அறிவித்தும் இருந்தார். அது குறித்து சர்ச்சையில் சிக்கினார், இது தேர்தல் விதிகளை மீறுவதாகும் எனக் கூறி நீதித்துறை எலான் மஸ்க் சலுகைக்குத் தடை விதித்திருந்தது. இருப்பினும், அதனைத்தொடர்ந்து எலான் மஸ்க் பல இடங்களுக்குச் சென்று டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
எனவே, இப்படியான உதவி செய்திருப்பதும்… தொடர்ச்சியாக டொனால்ட் டிரம்பிற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவிப்பதும் ஒரு வகையான தொழில் யுக்தி தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், எலான் மஸ்க் டொனால்ட் டிரம்க்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய டெஸ்லா கம்பெனி மூலம் பல கோடிகள் லாபம் பார்த்து இருக்கிறார். அதாவது, நாஸ்டாக் (NASDAQ) எனும் அமெரிக்கா பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனம் பங்குகள் ஒரு நாளில் 15% உயர்ந்துள்ளது. அதாவது, டெஸ்லா பங்கு ஒன்று 288.53 டாலராக உயர்ந்தது.
இதன்மூலம், எலான் மஸ்க் சொத்துமதிப்பும் முன்பு இருந்ததை விட இன்னும் அதிகம் உயர்ந்துள்ளது. டெஸ்லா பங்கு அதிகரித்ததன் மூலம், எலான் மஸ்க் சொத்துமதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பின் படி ரூ.2.19 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. மொத்தமாக, 20.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பின் படி 1 லட்சத்து 75,000 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. நேரம் காலம் பார்க்காமல் தன்னுடைய வேலையைத் தள்ளி வைத்துவிட்டு ட்ரம்புக்காக பல இடங்களுக்குச் சென்று எலான் மஸ்க் பிரச்சாரம் செய்தது அவருக்குப் பல கோடிகள் லாபத்தையும் கொடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக பெரிய அளவில் நேரடி அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்த எலான் மஸ்க் திடீரென இந்த முறை தேர்தல் அரசியலில் களமிறங்கி டொனால்ட் டிரம்ப்க்கு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துப் பல கோடிகளை எலான் மஸ்க் சம்பாதித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக இந்திய மதிப்பில் 1000 கோடி முதலீடு செய்து ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது அவருடைய மாஸ்டர் பிளானாக பார்க்கப்படுகிறது.