Love Brain [file image]
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு ‘லவ் ப்ரைன்’ எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிச்சுவான் எனும் மாகாணத்தில் வாழ்ந்து வருபவர் தான் சியாயு எனும் கல்லூரி மாணவி. இவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தனது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு கலோரியின் முதல் ஆண்டிலேயே சக மாணவர் ஒருவரை காதலித்தும் வந்துள்ளார். அந்த மாணவரும் சியாயு மீது காதல் வயப்பட்டதுடன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த உறவு இருவரின் வாழ்க்கையை அப்போது மாற்ற போகிறது என்று இருவருக்கும் அப்போது தெரியாது.
அதன் பின் இருவரும் மிகவும் நெருங்கி பழகி அவர்களது உறவை வளர்த்துக் கொண்டுள்ளனர். இந்த காதல் ஜோடியில் அந்த மாணவி அந்த மாணவன் மீது அளவில்லாத காதலில் விழுந்துள்ளார். இதனால் அந்த மாணவி, எல்லா நேரமும் அந்த மாணவனையே சார்ந்து இருந்துள்தாகவும், மேலும் எல்லா நேரத்திலும் அவளுடன் இருக்குமாறும் அவளுடன் பேசுமாறும் அந்த மாணவனை வற்புருத்தி உள்ளதாகவும் சீன பத்திரிகை ஒன்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு கட்டத்திற்கு மேல் அந்த மாணவனுக்கு அழுத்தம் வந்ததால் அந்த மாணவன் அந்த மாணவியை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு அந்த மாணவி எப்போதும் அவருக்கு வீடியோ கால் செய்து கொண்டே இருப்பதும், அவரை பார்க்கின்ற இடங்கள் எல்லாம் பேச சொல்லி வற்புறுத்துவதுமாக இருந்துள்ளார். ஆனால் அந்த மாணவன் இது போன்ற எல்லா அழைப்புகளையும் புறக்கணித்து உள்ளார்.
இந்த நிலை படிப்படியாக மோசமாகி ஒரு நாள் அந்த மாணவி அந்த மாணவனுக்கு ஒரு நாளுக்கு 100 முறைக்கு மேல் மிஸ்டு கால் செய்துள்ளார். ஒரு நாள் அந்த மாணவி இந்த காதலனுக்கு 100 முறைக்கு மேல் போனில் மிஸ்டு கால் கொடுத்துள்ளார். அவர்எந்த ஒரு பதிலும் அதற்கு அளிக்கததால். பொறுமையை இழந்த அந்த மாணவி சியாயு தனது வீட்டின் பொருள்களை வீசி உடைத்துள்ளார். மேலும், வீட்டில் இருக்கும் விலைமதிப்புள்ள பொருட்களையும் வீசி உடைத்துள்ளார்.
அதன் பிறகு ‘நீ இப்போது வரவில்லை என்றால் நான் பால்கனியில் (மாடியில்) இருந்து குதித்து விடுவேன் என்று அந்த மாணவனை மிரட்டி உள்ளார். இதனால் பதறி அடித்து அந்த காதலன் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளார். அங்கு அந்த மாணவியின் நிலையை கண்ட அந்த மாணவன் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்த காவல் துறை அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு ஃபோர்த் பீப்புள்ஸ் ஹாஸ்பிடல் (Fourth People’s Hospital) என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டூ என்பவர், மாணவி சியாயு ‘ப்ரைன் லவ்’ எனும் ஆளுமைக் கோளாறால் ஏற்பட்ட விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். இந்த நோய் மனச்சோர்வு, இருமுனைக் கோளாறு மற்றும் பதட்டம் போன்ற பிற மன நோய்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றுள்ளார்.
இந்த மாணவிக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கான எதார்த்த காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும் குழந்தை பருவத்தில் பெற்றோருடன் நெருங்கி பழகாத குழைந்தைகளுக்கு இந்த ‘ப்ரைன் லவ்’ நோய் பெரும்பாலும் காணப்படுவதாக கூறி இருக்கிறார்.
இந்த நோயால் அவதி படுகிறோம் என்று நமக்கு தொடக்கத்திலேயே தெரிந்தால் நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டாலே போதுமானது அப்படி செய்தால் நாமாகவே இதிலிருந்து குணமடைய முடியும், இருந்தாலும் இது தீவிரமாகும் பட்சத்தில் மருத்துவ உதவி கண்டிப்பாக தேவை எனவும் மருத்துவர் டு கூறி இருந்தார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…