சோகம்…..மெக்சிகோவில் கொளுத்தும் வெயிலால் ஜூன் மாதம் 100 பேர் பலி.!

Mexico Heat wave

மெக்சிகோவில் கடந்த 2 வாரமாக அதிகரித்து வரும் வெப்ப அலையால் சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஜூன் மாதம் மெக்சிகோவில் கடுமையான வெப்பநிலை காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயிலில் அந்நாட்டு மக்கள் தத்தளித்து வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) ஆக உயர்ந்துள்ளதாக மெக்சிகோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெப்பம் காரணமாக ஒரு உயிரிழப்பு மட்டுமே பதிவான நிலையில், தற்போது 100 பேர் பலியாகியுள்ளனர். இந்த இறப்புக்கான முதன்மைக் காரணமாக வெப்பப் பக்கவாதம் கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து நீரிழப்பு எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்