சீனாவில் தினசரி 10 லட்சம் கோவிட் வழக்குகள்! புத்தாண்டில் இரட்டிப்பாக வாய்ப்பு.!
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் தினசரி 10 லட்சம் கோவிட் வழக்குகள் பதிவாகிறது எனவும் புத்தாண்டில் இரட்டிப்பாகலாம் எனவும் தகவல்.
சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சீனாவில் ஒரேநாளில் கிட்டத்தட்ட கோடிக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சீனாவின் ஜெஜியாங் நகரில் தினசரி சுமார் 10 லட்சம் புதிய கோவிட் வழக்குகள் பதிவாகிறது.
மேலும் வரும் புத்தாண்டு தினத்தில் இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடு தளவிய அளவில் கொரோனா பாதிப்புகளுக்கான சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை.
நாட்டின் தேசிய சுகாதார ஆணையம், அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளை கணக்கிடுவதை நிறுத்தியுள்ளது, இது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அளவிடுவதை மேலும் கடினமாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.