Missile Attack : இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இரு தரப்பும் தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் முயற்சி எடுத்தும், போரின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறதே தவிர, நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தொடர் தாக்குதலால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது. இந்த சூழலில், இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இருக்கும் விவசாய தோட்டத்தை தாக்கியுள்ளது.
இதில், இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் Ziv மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த மூன்று பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், விவசாயத் தொழிலாளர்கள் மீது ஷியா பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புல்லா நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது மற்றும் இருவர் காயமடைந்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இஸ்ரேலிய மருத்துவ நிறுவனங்கள் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை செய்து வருவதாகவும், உயிரிழத்தவர் குடும்பத்து இரங்கல் தெரிவித்தார் இஸ்ரேல், அனைவரையும் சமமாக பார்ப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…