கனமழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்…10 விமானங்கள் ரத்து.!

uae rain

UAE Rain: ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு அதிகப்படியான மழைபொழிவால், துபாய் நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளதாக அமீரக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஓமனியில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஐ கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடுமையான கனமழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் துபாய் விமான நிலையம் பகுதியளவு மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்