ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு பொதுத்தேர்தலே ஒரே வழியென, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஜனநாயகமும் பொதுத்தேர்தல்களும் என்ற அறிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பின் படி இறைமை என்பது மக்களிடத்தில் தான் உள்ளதே தவிர நாடாளுமன்றத்திடம் இல்லை என்று கூறியுள்ளார்.
மக்கள் தங்கள் இறைமையை வாக்களிப்பு மூலமே பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்ச, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை இலங்கையில் மட்டும்தான் காணமுடிகிறது என்று கூறியுள்ளார்.
ஆறு மாகாண சபைகள் இயங்காத நிலையில் காணப்படுவதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தேர்தல்களை கடந்த ஒரு வருட காலமாக அரசாங்கம் நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் இந்த விஷயம் குறித்து ஆழ்ந்து சிந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாக ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…