கொரோனா எப்படி தோன்றியது என தெரிந்தால் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.! WHO வேண்டுகோள்.!
கொரோனா தொற்று தோற்றம் பற்றிய தகவல்கள் ஏதேனும் எந்த நாட்டிற்காவது தெரிந்து இருந்தால், அந்த தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். – WHO வேண்டுகோள்.
சீனாவில் உள்ள வுகாண் ஆய்வு கூடத்தில் இருந்து உலகம் முழுக்க பரவி உலகை ஸ்தம்பிக்க வைத்த வைரஸ் தான் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தற்போது பெரும்பாலும் தடுப்பூசி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தபட்டுள்ளது.
அமெரிக்கா குற்றசாட்டு : இந்த கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பியது என பரவலான குற்றசாட்டு நிலவி வருகிறது. சீனாவின் வுஹானில் நடந்த ஆய்வத்தில் இருந்து தான் COVID-19 பரவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
WHO வேண்டுகோள் : இந்த வேளையில் தான், உலக சுகாதார அமைப்பான WHO கூறும்போது, கொரோனா தொற்று தோற்றம் பற்றிய தகவல்கள் ஏதேனும் எந்த நாட்டிற்காவது தெரிந்து இருந்தால், அந்த தகவலை WHO உடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எனவும், இப்படியான தகவலை பகிரும் போது, சீனா வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் WHO கூறியது.