இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால் பிரதமர் பதவி…சிறிசேனா உத்தரவு…!!
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெரும்பான்மையுடன் பதவி வகித்த ரனில் விக்ரமசிங்கே, தம்மை கொலை செய்ய சதி செய்ததாக பிரதமர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். இது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜபக்சே திணறினார். இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.இதனிடையே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாகவும், அப்போது பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவியை வழங்கி முடிவுக்கு கொண்டுவர அதிபர் சிறிசேனா தரப்பு முடிவு செய்துள்ளது.
dinasuvadu.com