ஆடம்பரமாக நடந்து முடிந்த இளவரசர் ஹாரி -மெகன் திருமணம்!உலக அளவில் ட்ரெண்ட் ஆன ஹாஸ்டேக் !
இன்று கோலாகலமாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் நடைபெற்றது.
இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு தங்கள் திருமண சடங்கை முடித்தனர். இந்த திருமண விழாவில் உலகின் பெரும்பாலான இடங்களிலிருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தத் திருமணம் நிகழ்ச்சி ட்விட்டரில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
#RoyalWedding #Prince Harry ஆகிய ஹாஸ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகின. இந்தத் திருமண விழாவில் செரீனா வில்லியம்ஸ், டேவிட் பெக்கம் போன்ற விளையாட்டு பிரபலங்களும் கலந்து கொண்டன.
பிரதமர் தெரசா மே வாழ்த்து
இளவரசர் ஹாரி மற்றும் மெகனின் திருமண நிகழ்வுக்கு இங்கிலாந்து பிரதமர் தெர்சா மே ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். திருமணம் அரசு குடும்பத்தின் விழா என்பதால் பிரதமர் மே உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இளவரசர் ஹாரியை திருமணம் செய்தன் மூலம் இங்கிலாந்து இளவரசியாகும் முதல் கருப்பின கலப்பின பெண் என்ற பெருமையை மெகன் பெற்றிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.