அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவும் இதற்கான செலவினங்களை தங்குதடையின்றி ஒதுக்கீடு செய்யவும் இந்த உத்தரவு துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…