யூடியூப் மோகம்… முற்றிய தொழில் போட்டி.? KGF துணிக்கடையின் தற்போதைய நிலை…

KGF Vignesh

கேஜிஎப் துணிக்கடை உரிமையாளர் விக்னேஷ் குழந்தை தொழிலார்களை வேலைக்கு பணியமர்த்தியதாக கூறி அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இங்க வாங்க நான் உக்கார வாட்டத்தை காட்டுறேன் என என ராஜ பகதூர் ஸ்டைலில் இணையத்தில் வசனம் பேசி வந்த கேஜிஎப் விக்கி எனும் விக்னேஷ் தற்போது காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார். யூடியூப் சேனலில் பேட்டி எடுக்க சிலர் கேஜிஎப் கடைக்கு வர , கடையின் ஓனர் விக்னேஷ் எனும் கேஜிஎப் விக்கி தனது காமெடி கலந்த பேச்சால் இணையத்தில் வெகு சீக்கிரம் வைரலானார். தனது காமெடி பேச்சால் பிரபலமான கேஜிஎப் விக்கி அடுத்தடுத்து கடைகள் பெருகி, அஜித் படத்தின் நடிக்கும் வாய்ப்பை தட்டி சென்றார்.

யூடியூபில் பிரபலமான உடன் அடுத்தடுத்த பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார் விக்கி. அதன் பின்னர், தனியாக  யூ-டியூப் சேனல் தொடங்கி, யூடியூப் சார்ட்ஸ் மூலம் பிரபலமானார் விக்கி. அப்போது மற்ற கடைக்காரர்களின் துணிகடைகள் பற்றி விமர்சனம்  செய்து அவர்கள் புகார் அளித்தும், அடியாட்களை ஏவியதாகவும் விக்கி இணையத்தில் கூறிவந்த கதைகளும் உண்டு.

அதன் பின்னர், தனது துணிக்கடை வியாபாரத்தை மட்டுமே கவனித்து வந்த கேஜிஎப் விக்கிக்கு தீபாவளி பண்டிகை தின வியாபார சமயத்தில் புது பிரச்னையும் எழுந்தது. அதில்,  சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்.சி.சாலையில் 3 துணிக்கடைகளை வைத்துள்ள விக்கி, குழந்தை தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தியதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில், குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்பு குழு அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள், வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் ஆகியோர் கேஜிஎப் துணிக்கடைகளில் ரெய்டு நடத்தினர். அப்போது, 18 வயதுக்கு உட்பட்ட 10 சிறுவர்கள் பணியில் இருந்ததாகவும், அதில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பணியமர்த்தப்படுவதும் கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து, கேஜிஎப் விக்கி மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கேஜிஎப் விக்கி தரப்பு கூறுகையில், கேஜிஎப் கடை மீதான தொழில் போட்டி காரணமாகவும் , தீபாவளி சமயத்தில் வியாபாரத்தை சிதைக்கும் நோக்கிலும் சிலர் இம்மாதிரியான புகார் அளித்தததாக கூறப்பட்டது. குழந்தை தொழிலாளர்களிடம் விசாரணை செய்கையில்,  ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை, குறைந்த சம்பளம் கொடுத்ததாகவும் கூறினார். இதனை அடுத்து, குழந்தை தொழிலாளர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் ஒரு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள கடை ஓனர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீபாவளி சமயத்தில் இதுபோன்ற குழந்தை தொழிலாளர்கள் ரெய்டு என்பது வழக்கமான விஷயம் தான். ஆனால், அதனை நாங்கள் தான் புகார் அளித்தோம் என கேஜிஎப் கடை ஓனர் விக்கி, அவரது குடும்பத்தினர், கடை ஊழியர்கள் வந்து மிரட்டுகின்றனர் என குற்றம் சாட்டி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்