சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு குறித்த விபரம் .!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,538 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192பேரும், திரு.வி.க. நகரில் 976பேரும் பாதிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.