Zoho ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் நிர்கதியாய் விட்டு சென்றார்.! மனைவி பரபரப்பு குற்றசாட்டு.!
ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பிரபல மென்பொருள் நிறுவனமான சோகோ (Zoho)வின் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்புமீது அவர் மனைவி பரபரப்பு குற்றசாட்டை முன் வைத்துள்ளார். ஸ்ரீதர் வேம்புக்குவுக்கு திருமணம் ஆகி பிரமிளா எனும் மனைவி உள்ளார். அவர்களுக்கு ஆர்ட்டிஸம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறார்.
கலிபோர்னியா – தென்காசி :
இவர் கடந்த 2020 வரையில் அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தார். அதன் பிறகு கிராமங்களில் இருக்க விரும்பிய அவர், தென்காசி, மதளம்பாறை எனும் ஊரில் இயற்கை சார்ந்த வாழ்வியலில் வாழ்ந்து வருகிறார்.
மனைவி குற்றசாட்டு :
இவர் 2020ஆம் ஆண்டு தன்னையும் தன் மகனையும் அமெரிக்காவில் நிர்கதியாய் விட்டு சென்றுவிட்டார் எனவும், தன்னை கேட்காமல், சொத்துக்களை அவர் சகோதரிகளுக்கு கொடுத்துள்ளார் எனவும், தனக்கு தேவையான நிதியுதவி கொடுக்கவில்லை எனவும் ஸ்ரீதர் வேம்பு மனைவி பிரமீளா ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீதர் வேம்பு மறுப்பு :
கலிபோர்னியா குடும்ப சட்டம் படி, மனைவியை கேட்காமல், கணவர் சொத்துக்களை விற்க அனுமதி இல்லை . இந்த குற்றசாட்டை ஸ்ரீதர் வேம்பு முழுதாக மறுத்துள்ளார். தான் 2020இல் தமிழகம் வந்ததாகவும், அப்போதே அவர்களை தமிழகம் வர சொன்னதாகவும் அவர்கள் வர மறுத்துவிட்டனர். தான் எந்த சொத்தையும் யாருக்கும் கொடுக்கவில்லை. தற்போதும் எனது நிறுவன நிதி விவரங்களை நான் பார்த்து தான் வருகிறேன் எனவும், இப்பொது வரையில் எனது மனைவிக்கு நான் தேவையான பணத்தை கொடுத்து தான் வருகிறான் எனவும் அதே பத்திரிகைக்கு zoho தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.