இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமே அந்த நபர் தான்.! மன வேதனையில் Zoho ஸ்ரீதர் வேம்பு.!

Default Image

தனது மனைவியுடனான மன வருத்தம் பற்றியும் அதன் விரிவான விளக்கத்தையும் ஜோஹோ தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (zoho) நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமீளா அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். தனனையும், தனது ஆர்ட்டிஸம் பாதித்த குழந்தையையும் தனியாக் தவிக்க விட்டு சென்றுவிட்டார். என்னை கேட்காமலேயே பங்குகளை விற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மிக பெரிய விளக்கத்தை நேற்று பதிவிட்டுள்ளார். அதில், ஆர்ட்டிஸம் பதித்த தனது குழந்தையின் உடல் நலனுக்காக பல வருடங்கள் போராடினோம். தற்போது அவனுக்கு 24 வயது ஆகிவிட்டது. பிரமீளா ஒரு சூப்பர் அம்மா என குறிப்பிட்டார். தற்போது தான் கிராமத்தில் வசிப்பதாகவும்,

தன்னை விட நல்ல வசதியாக தான் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்றும் , தனது, கடந்த 2 வருட சம்பளம் பிரமிளாவிடம் தான் இருக்கிறது என்றும், நான் எந்த பங்குகளையும் யாருக்கும் கொடுக்காவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும், எனது திருமண வாழ்வின் இறுதி முடிவுக்கு காரணம் எனது தந்தையின் இளைய சகோதரர் தான் எனவும், அவர் அண்மைய காலமாக அமெரிக்காவில் தான் இருக்கிறார் என்றும். புற்றுநோய் சிகிச்சைகாக வந்த அவருக்கு அடைக்கலம் கொடுத்தேன். எனது தந்தையுடன் அவரது எதிர்ப்பையும் மீறி அவருக்கு அடைக்கலம் கொடுத்தேன். இருந்தும், அவர் பொய்யான வதந்திகளை பரப்பிவிட்டார்.

துரதிஷ்டவசமாக தற்போது பிரமீளா, அவரை நம்பி வருகிறார். என்றும் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டி தனது விளக்கத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu