சென்னையில், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணம் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் விதிமீறல் இல்லாத திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறி செயல்படுவதன் மூலம் பலவிதமான ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு பல உயிர்கள் வாகன விபத்துகளினால் பறிபோகிறது. இந்நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணமாக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதாவது ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்வது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சிக்னல் ஜம்பிங், வெள்ளை கோட்டை தண்டி வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை தடுக்கும் வண்ணமாக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் விதிமீறல் இல்லாத திட்டம்(Zero violation junction) கொண்டுவரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த திட்டமானது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா நினைவு வளைவு சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல் ஆகிய நான்கு சிக்னல்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள ஆய்வாளர்கள் இத்திட்டம் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக குறைப்பது. போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள சந்திப்புகளில் நிபந்தனையின்றி உடனடியாக 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் இந்த திட்டம் பற்றி போலீசார் அறிவுரைகளை வழங்குவார்கள். ஒரே நபர் தொடர்ந்து விதிமுறைகள் மீறும்போது அவர்களது வாகன உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…