பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட,யூ-டியூபர் மதனிடம்,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில்,யூ-டியூபர் மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.
இதனைத் தொடர்ந்து,மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.அப்போது,செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்தபோது,நான் என்ன பிரதமரா?”,என்று மதன் கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த போலீசார்,”நீ ஒரு குற்றவாளி”,என்று கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.
அதன்பின்னர்,அங்கு மதனிடம்,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்,மதனை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும்,பின்பு காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…