குழந்தை ஆணா? பெண்ணா? சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்..!
சென்னை: யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
உணவு சம்பந்தமான ர்வியூக்களை பதிவிட்டு வரும் பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
ஆம்,இது குறித்து யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், காவல்துறையிடமும் புகார் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் தமிழ்நாட்டில், ஒரு தாய் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்துக் கண்டறியவும், அதை அறிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.